ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

.இறைமை என்பது

ஒரு அதிகார மையத்தில் இருந்து இன்னொரு அதிகார மையத்துக்கு அதிகாரம் கை மாறவதற்குப் பெயர் சுதந்திரமல்ல.இறைமை என்பது கடவுளால் படைக்கப்பட்டதுமல்ல வானத்தில் இருந்து குதித்து வந்ததுமல்ல.ஒவ்வொரு தனிமனிதனதும் அவனால் உருவாக்கப்பட்ட சமூக அமைப்பினதும் ,நிலம், மொழி, பண்பாடு மற்றும் கலாச்சாரம் முதலானவற்றை உள்ளடக்கிய வாழ்வியல் இயங்கு தளத்தின் தொடர்ச்சியான நீண்ட நெடிய வரலாற்றில் இருந்து தோற்றம் பெற்றதே இறைமையாகும்..அந்த இறைமை என்பது மக்களுக்கானது..
அந்த இறமையை கையகப்படுத்தும் கைமாற்றும் உரிமை காலணித்துவவாதிகளுக்கோ. உள்ளுர் அதிகார வர்க்கத்துக்கோ கிடையாது.
அந்த வகையில் இலங்கைத்தீவில் வாழ்ந்த தழிழீழ மக்களுடைய இறைமையை சட்டவிரோமாக கைப் பற்றி அதை சட்டவிரேதமாக இன்னொரு அதிகாரவர்கத்துக்கு கைமாற்றம் செய்த நிகழ்வை எமது சுதந்திர தினமாக ஏற்றுக்கொள்ள முடியாது. என்னைப் பொறுத்தவரை அதைத சுதந்திரம் என்று நினைப்பவர்கள் நவீன அடிமைகளாயாகும்.இவர்கள் ஒரு எசமானால் வளாக்கப்பட்ட நாய், இன்னொரு எசமானிடம் ஒப்படைக்கப்பட நிலைக்கு சமமானவர்கள்.அந்த எசமானர்கள் வீசிஎறியும் எலும்புத்துண்டுக்கு வாலாட்டிக்கொண்டிருப்பது தான் இவர்களது சுதந்திரம் பற்றிய புரிதலாகும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக