ஞாயிறு, 10 பிப்ரவரி, 2019

இதற்குப் பின்னால் இருப்பது யார்?

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு அதிகளவுக்குத் தீங்கு செய்த ஒரு அமைப்பு என்றால் அது ஈபிஆர்எல்எப் தான்.இந்திய இராணுவ காலகட்டத்தில் இந்த அமைப்பு செய்த ஈவிரக்கமற்ற படுகொலைகள் காட்டிக் கொடுப்புக்கள் எண்ணில் அடங்காதவை. இவை ஈபிஆர்எல்எப் கடைப்பிடிப்பதாக ஆரம்பத்தில் சொல்லிக்கொண்ட பொதுவுடைமை கொள்கைக்கு முற்றிலும் விரோதமானது.இவற்றை சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் இயங்கிய மண்டையன் குழு தான் செய்தது என்று சில ஈபிஆர்எல்எப் பெரிசுகள் கூறிவிட்டுத் தப்பிக்கப்பார்க்கிறார்கள்.
விடுதலைப்புலிகள் இயக்கம் இவற்றை எல்லாம் புறம் தள்ளிவிட்டுதான் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையினான ஈபிஆர்எல்எப் இயக்கத்தை தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இணைக்க ஒத்துக்கொண்டார்கள்.
இப்போது தாங்கள் செய்த படுகொலைகளை,ஆட்கடத்தல்களை காட்டிக்கொடுப்புக்களை வசதியாக மறைத்துவிட்டு விடுதலைப்புலிகளின் தவறுகளை உயர்த்திப் பிடிக்க வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது.இதற்குப் பின்னால் இருப்பது யார்?முதலில் நீங்கள் உங்களை சுயவிமர்சனம் செய்துகொண்டல்லவா மற்றவர்களை விமர்சிக்க வேண்டும்.அது தானே புரட்சிகர அரசியல்.
ஈபிஆர்எல் உறுப்ப்pனர்களுக்கும் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் பலருக்கும் தெரியாத உண்மை ஒன்று இருக்கிறது. தமிழீழ தேசியத்தலைவருக்கும்  ஈபிஆர்எல் தலைவர் பத்மநாபாவுக்கும் இடையில் 1984 வரை நல்ல புரிதல் இருந்தது.நபா அந்தக் காலத்தில் இந்திய நக்சல்பாரிகள் எனப்படும் புரட்சிகர இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தார்.இந்திய அதிகார வர்க்கத்துக்கு எதிரானவராக இருந்தார்.அவரை இந்திய அதிகர வர்க்கத்தின் வலையில் விழுத்தி இயக்க மோதல்களுக்குள் சிக்க வைத்தது பெருமாள்.நான் 1985ல் கும்பகோணத்தில் நாபாவை சந்தித்த போது இதை அவரிடமே கேட்டேன். 'தன்னுடைய விருப்புகள் வேறு.அமைப்பின் தலைவர் என்ற வகையின் அதன் முடிவுக்குத் தான் கட்டுப்பட்டுள்ளேன்' என்றார்.
1984 ல் தலைவர் பிரபாகரன் அவர்கள் தனது நட்பின் அடையாளமாக நபாவுக்கு நினைவுப் பரிசு ஒன்றை வழங்கியிருந்தார் . இந்த நினைவுப் பரிசு பாண்டிபஜாரில் வாங்கப்பட்டது.அதை நாபா ஒரு பொக்கிசமாக கருதி தனது பெட்டியில் பாதுகாத்து வைத்திருந்தார். இது முன்னணி ஈபிஆர்எல்எப் உறுப்பினர்களுக்குத் தெரியும்.இன்று அதைச் சொல்ல மாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக